சொந்த முயற்சி – one’s own making

NALATIYAR- SELF EFFORT

NALATIYAR- SELF EFFORT

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை
நிலைக்கலக்கிக் கீழிடுவானும் – நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்
/நாலடியார்/
பொருள் :-  நல்ல நிலையில் தன்னை வைத்துக் கொள்வதும், இருக்கும் நிலையிலிருந்து தாழ்ந்து போய் தன்னைக் கீழ் இறங்கிவிடுவதும், அப்படி இறங்கியபின் மீண்டும் மேல் நிலைக்கு செல்வதும், அனைவருக்கும் தலைவனாக உயர்வதும் எல்லாவற்றுக்குமே ஒருவரின் சொந்த முயற்சி, ஆர்வம், உழைப்புதான் காரணமாகிறது.

Meaning :- Being in good stage in life or falling down from stature and again raising to an elevated position, being a leader among men – all happen by one’s own effort.
The need for self effort is emphasized here.