நல்லவர் உள்ளம் – noble hearted

படிறும் பயனிலவும் பட்டி உரையும்
வசையும் புறனும் உரையாரே என்றும்
அசையாத உள்ளத்தவர்
/ஆசாரக் கோவை/
பொருள்:- பொய் பேச மாட்டார்கள்; பயனற்ற சொல் கூற மாட்டார்கள்;வீண் வார்த்தைகளை விளம்ப மாட்டார்கள்; திட்ட மாட்டார்கள்; புறங்கூற மாட்டார்கள்- என்றும் நடுவு நிலையில் உறுதியாக இருக்கும் நல்லவர்கள் என்கிறது ஆசாரக் கோவை

Meaning in English – Those who are just & fair in dealings will not lie, will not throw loose words, will not curse, will not backbite.