பழமொழி மூலம் என்.எல்.பி

“முள்ளை முள்ளால் எடுக்கலாம்; சேற்றை சேற்றால் போக்க முடியுமா?”

முள்ளை முள்ளால் எடுப்பது போல் சேற்றை சேற்றால் எடுக்க முயற்சி செய்தால் மேலும் சேறு பூசப் பெற்று அழுக்காகத்தான் ஆகும்.
முள்ளின் தன்மை வேறு; சேற்றின் தன்மை வேறு என்பதை புரிந்து கொண்டவர்கள் இந்தத் தவறை செய்ய மாட்டார்கள்

ஒவ்வொன்றின் தன்மைக்கு ஏற்றவாறு வழிமுறையை தேர்வு செய்ய வேண்டும். இல்லையேல் சிக்கல்தான் அதிகரிக்கும்.

என்.எல்..பி என்ன சொல்கிறது ?
நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள்.
Everyone is unique; this uniqueness must be cherished
ஒருவர் போல் மற்றவர் அப்படியே கிடையாது. அதனால் ஒருவருக்குப் பொருந்தும் ஒரு விஷயம் மற்றவருக்கு அப்படியே பொருந்தும் என சொல்ல முடியாது.
எந்த ஒரு தனிபரின் எண்ணம் நோக்கம் உள்வாங்கும் பாங்கு, அவர் சார்ந்துள்ள சூழல் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவருக்குப் பொருத்தமாக உதவி செய்ய முடியும்.

என்.எல்.பி உத்திகளை கையாளும்போதும் மாத்திரைகளை பரிந்துரை செய்வது போல ‘இதுக்கு இது அதுக்கு அது’ என்று பொத்தாம்பொதுவாக கையாளாமல் ஆலோசனை கேட்கும் நபரின் தனித்தன்மையை அவரது சூழ்னிலையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி உதவி செய்தல் வேண்டும்.