ஒழுக்கம்- CONDUCT

நன்றி அறிதல் பொறை உடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத்தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசாரவித்து
/ ஆசாரக் கோவை/
1.பிறர் செய்த உதவிக்கு நன்றி பாரட்டுதல்,
2. பொறுமை உடையராக இருத்தல்
3. எந்த உயிருக்கும் தீங்கு செய்யாதிருத்தல்
4. இனிய சொற்களைப் பேசுதல்
5. உலகத்தோடு ஒட்டி வாழுதல்
6. கல்வி கற்று அறிவை வளர்த்தல்
7. பெரியவர்கள் வழிகாட்டியபடி வாழ்தல்
8. நல்ல குணம் உடையவர்களை நட்பாக கொள்ளல்

இவை எட்டும் நல்லொழுக்கத்தின் வித்தென ஆசாரக் கொவை சொல்கிறது.

1. Being grateful
2. Being patient
3. Being harmless
4. Being kind in words
5. Being adaptive to environ
6. Being  wise by proper learning
7. Being guided by respectable elders
8. Being a friend of those who are noble
These 8 qualities are the seeds for a noble life with appreciatable conduct says ” ACHARA KOVAI”