உழைப்பே உயர்வு – EFFORT IS NOBLE
நந்தெறும்பு தூக்கணம் காக்கை என்று இவைபோல்
தம் கருமம் நல்ல கடைபிடித்துத் தம் கருமம்
அப்பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பற்றி யாயினும் படும்
/ ஆசாரக் கோவை/
பொருள் : –
எறும்பு ஓய்வின்றி சுறுசுறுப்பாக உழைத்து உணவு தேடிக் கொள்வது போலவும்,
தூக்கணாங்குருவி விடாமுயற்சியோடு பாதுகாப்பான கூடு கட்டி வாழ்வதுபோலவும்,
காக்கை கூவி அழைத்து கூடி உண்பது போலவும்,
தன்னுடைய செயல்களில் சுறுசுறுப்பு, ஊக்கம், விடாமுயற்சி, பிறரை அனுசரித்து வாழ்ந்து பணியாற்றுபவனுக்கு உயர்வு நிச்சயம் உண்டு.
Meaning – One who tirelessly strives like ants, persistent like sparrow building its nest, accomodative like crow coexisting with its crowd, one is sure to succeed & grow in life.