என்.எல்.பி என்றால் என்ன? ( what is NLP?)

என்.எல்.பி என்றால் என்ன?

NLP

NLP in Tamil

என் எல் பி என்பது நியூரோ லிங்விஸ்டிக் ப்ரொக்ரம் என்பதன் சுருக்கம்.

இந்த நீளமான பெயரை சொல்வதைவிட, சுருக்கமாக என்எல்பி என்று சொல்வது எளிமையாக இருப்பதால் அப்படி சொல்லிப் பழகிவிட்ட காரணத்தால், மக்கள் என்எல்பி என்றால்தான் உடனே புரிந்து கொள்கிறார்கள்.

இந்த பெயர் நீளமாகவும் வித்தியாசமாகவும் இருப்பதாலேயே மக்கள் மனதில் ஒரு ஈர்ப்பு உண்டாகிறது.

ஊக்கப்பயிற்சி, உளவியல் சிகிச்சை என்று அனைத்து வழிகளையும் உள்ளடக்கி ஆழமான விரிவான வழிமுறை ஒன்றை உலகுக்கு வழங்கும் பேரார்வத்தில் இதன் நிறுவனர்கள் நீளமான பெயரை சூட்டிவிட்டார்கள்.

  • பெயர் நீளமாக இருந்தாலும் என்.எல்.பி-யை புரிந்து கொள்வது எளிது.
  • பயிற்சிகளை செய்வது சுவாரஸ்யமானது.
  • நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து உங்களை பலப்படுத்தும்.
  • நீங்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த  வழி காட்டும்.
  • விரும்பிய பலனை விரைவில் கிடைக்க வழி வகுக்கும்.
  • உங்களை நீங்களே இயல்பாக ஏற்றுக்கொள்ள வைக்கும்.
  • சிந்தனை,சொல்,செயலில் ஒரு திடம் ஏற்பட உதவும்.
  • ஆக்கபூர்வமான பார்வை, அணுகுமுறை கூடும்.
  • மனதில் மகிழ்ச்சி இயல்பாக குடியிருக்கும்.
  • பிறரோடு இணக்கமாக இருக்க வைக்கும்
  • நம் கடந்த கால கசப்புகளை கரைக்கும்

மொத்தத்தில் துணிவுடனும், தெளிவுடனும், நல்ல வண்ணம் மண்ணில் வாழ வழி சொல்லிக்கொடுக்கும்.

 

நியூரோ என்பது மனதையும், அதன் இயக்கத்தையும் குறிக்கிறது. பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், முகர்தல் என்ற ஐந்து புலன்களால் உலகை உணர்கிறோம். இந்த உணர்வுகளை சுமந்து செல்லும் நரம்புகளை கருத்தில் கொண்டு ‘நியூரோஎன்ற சொல் சேர்க்கப்பட்டு இருக்கிறது. என்றாலும் உடலின் நரம்பு மண்டல இயக்கத்தைப் பற்றிய முழுமையான படிப்பு இல்லை.

இந்த உலகை புலனுணர்வால் அறிகிறோம்.புலனுணர்வுகள் மூளையைச் சென்றடைந்ததும் எண்ணங்களாக உருவெடுக்கின்றன. எண்ண உருவாக்கம் உடனடியாக உடல், உணர்ச்சிகள், நடத்தை ஆகியவற்றின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

அதனால்தான் மனத்தின் இயக்கத்தை குறிக்கும் விதமாக நியூரோ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

 

லிங்விஸ்டிக் என்பது, நமது அனுபவத்தை எப்படி மொழியில் வடிக்கிறோம், பிறரோடு பறிமாறிக்கொள்கிறோம் என்பதைக் குறிக்கிறது.

மேலும் நமது சொற்பிரயோகம் எந்தளவு நம் அனுபவத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் என்.எல்.பி கவனிக்கிறது.

அனுபவம்      =      மொழிதல்

சொல்வன திருந்தச் சொன்னால் அனுபவத்தின் தரமும் கூடுகிறது என்று என்.எல்.பி சொல்கிறது.

 

ப்ரொக்ரமிங்என்பது அனுபவத்தை மொழிப்படுத்தி, நடத்தை மூலம் வெளிப்படுத்தும் முறையைக் குறிக்கிறது. நாம் புரிந்துகொள்ளும் விதம், முடிவெடுக்கும் பாங்கு, பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முறை ஆகியவற்றுக்கு நாம் கடைபிடிக்கும் வழிமுறைக்கு ’ப்ரொக்ரமிங்எனலாம்.

ப்ரொக்ரமிங் என்ற சொல் மென்பொருள் துறையிலிருந்து பெறப்பட்டுள்ளது

மூளை திடப்பொருள் என்றால், என்.எல்.பி மென்பொருள் ஆகும்.

 

சுருக்கமாக சொன்னால்,

நியூரோ       என்பது      சிந்தனை;

லிங்விஸ்டிக்  என்பது      சொல்

ப்ரொக்ரமிங்  என்பது       செயல்.

எனவே தினசரி மக்கள் எப்படி சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதன் தொகுப்பே என்.எல்.பி எனலாம். எந்த ஒரு செயலையும் திறம்பட செய்வதற்கான வழிகளை என்.எல்.பி. தந்து உதவுகிறது சிந்தனை, சொல் செயல் ஆகியவற்றை முறைப்படுத்தி வைக்க என்.எல்.பி. உதவுகிறது. ஆக்கபூர்வமான அணுகுமுறைக்கு வழி வகுக்கிறது. நினைத்ததை அடைய கூடுதல் திறன் தருகிறது.

அதனால் நடைமுறை வாழ்க்கையின் நடத்தைகளில்தான் என்.எல்.பி-யின் வேர்கள் பின்னியிருக்கின்றன. வெறும் ஆராய்ச்சிக் கட்டுரைபோல் அரங்குகளில் பகிர்ந்து கொள்ளும் விஷயமாக மட்டும் இல்லை.

எப்படி ஒருவர் சிறப்பாக உலகை உணர முடியும், எப்படி அனுபவத்தை மொழியால் விளக்கமுடியும், சைகையால் உணர்த்த முடியும், எப்படி தனது நடத்தையை, செயல்களை, செப்பனிட முடியும் என்பதற்கு என்.எல்.பி பெரிதும் உதவுகிறது.

எனவே என்.எல்.பி என்றால் என்ன ?

நடைமுறை வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் ஒரு வழிமுறை என்.எல்.பி எனலாம்.

வெளி உலகிலிருந்து தகவல்கள் புலன்கள் மூலம் உள்ளே நுழைந்து மூளையை சென்றடைகின்றன. அங்கு அவைகள் அறியப்பட்டு, சொல்லுக்கு  செயலுக்கு வித்திடப்படுகின்றன. புலன்களால் அறியப்பட்டு மொழியப்படுவதால் என்.எல்.பி-யை ஐம்புலஅறிவு என்றும் சொல்லலாம்.

அல்லது புலன்மொழித்திட்டம் என்று மொழிபெயர்க்கலாம்

 

என்.எல்.பி வறையறை(DEFINITION)

விஞ்ஞானமும் கலையும் ஒருங்கிணைந்த களஞ்சியத்தை ஒரு கோப்பைக்குள் அடைத்துவிட முடியாதுதான்.

என்றாலும் பல்வேறு நபர்கள் என்.எல்.பி-யை பல்வேறு கோணங்களில் புரிந்து கொண்டுள்ளனர்.பலப்பல பலன்களும் பெற்றுள்ளனர். அதனால் வறையறை என்பதும் பல வகைப்பட்டது.

என்.எல்.பி என்பது—

v  மேன்மை தரும் கலையும் விஞ்ஞானமும்

v  மனத்துக்கான சுய வழிகாட்டி

v  மூளையின் மென்பொருள்

v  மாறாத சிறப்புடன் தொடர்ந்து செயல்படச் செய்யும் சக்தி

v  ஆக்க சக்திகளை முறையான வழிகளில் பயன்படுத்துவதற்கான கையேடு

v  உள்ளார்ந்த அனுபவத்தின் வெளிப்படையான ஆய்வு

v  மனித இனத்தின் மீது தீராத ஆர்வம் கொண்ட மனப்பான்மையுடன் தொடர்யுக்திகளை தரும் வழிமுறை (ரிச்சார்ட் பாண்ட்லர்)

v   உலக நடைமுறையைக் கண்டறிந்து, பயன்படுத்துவதற்கு விரைவான வழிமுறைகளைக் கற்றுத் தருவது என்.எல்.பி (ஜான் கிரெண்டர்)

v  பலனளிக்கும் அனைத்துமே என்.எல்.பி ( ராபர்ட் டில்ட்)

 

ஆழ்மனஅற்புதத்தைஅள்ளித்தரும்அக்ஷயபாத்திரம்என்.எல்.பி  என்பது நான் தரும் விளக்கம்.

NLP

என்.எல்.பி-யால் யார் பயனடையலாம்?

NLP

NLP

என்.எல்.பி யால் யார் பயன் பெறலாம்? 

ª       மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருமே பயன் பெறலாம்

ª       பிரச்சனைகள் உள்ளவர்கள் என்று மட்டுமின்றி உடல் மன ஆரோக்கியத்துடன் உள்ளவர்களும் பயன் பெறலாம்

ª       தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமை ஆனோர், யாரும் பயன் பெறலாம்.

ª       வசீகரிக்கும் பேச்சுக் கலையை வளர்த்துக்கொள்ள விரும்புவோர்,

ª       நட்பு, சொந்தங்களோடு நல்லுறவு கொள்ள விரும்புவோர்,

ª       தன்னைத் தான் மேம்படுத்திக் கொள்ள விரும்புவோர்

ª       கடந்த கால கசப்புகளின் நினைவுகளிலிருந்து மீள விரும்புவோர்

ª       நடப்பு வாழ்க்கையின் நல்ல விஷயங்களை முறையாகப் பயன் படுத்தி முன்னேற விரும்புவோர்

ª       ஒரு அழகிய எதிர்காலத்தை அமைக்க ஆசைப்படுவோர்

பெற்றோர்கள் பெற்றோர்கள் சிந்தனைப் பாங்கு சிந்தனைத் திறன், சிந்தனையின் சாத்தியங்களை புரிந்து கொள்வதால், பிள்ளைகளோடு ஆக்கபூர்வமாக உறவாடி, அவர்களின் நம்பிக்கையை பெற்று நல்ல வழிகாட்டியாக அமைய முடியும். குடும்பத்தில் உறவு இன்னும் நெருக்கமாக ஆகும்.

பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் – மாணவர்களோடு இணக்கமாக இருப்பது எப்படி? மாணவர்கள் கற்கும் முறை உள்வாங்கும் முறை ஆகியவற்றை அறிந்து வகுப்புகளை நடத்தலாம்,

மாணவர்கள்கற்கும் முறை, நினைவாற்றல் பயிற்சி, விருப்பமில்லா பாடத்தில் விருப்பம் ஏற்படுத்துதல், தேர்வு பயம் போக்கி அதிக மதிப்பெண் பெற வழி செய்தல் என என்.எல்.பி உதவும்

மனநல ஆலோசகர்கள் : என்.எல்.பி ஆற்றுப்படுத்தும் முறை பாதுகாப்பானது. பிரச்சனையை தோண்டி ஆராய வேண்டியதில்லை. பிரச்சனை உள்ளவருக்கு தீர்வை சொல்லும் வழிகளை சொல்கிறது.

எனவே மன நல ஆலோசக்கர்களும் தங்களின் மன நலனை உற்சாகத்தை இழக்காமல் தக்க வைத்து கொள்ள் முடியும். சிக்கலுக்கான தீர்வையும் விரைவில் தரும்.

உடல் நல மருத்துவர்கள் —   நோயுற்று வருவோரின் உள்ளப்பாங்கையும் புரிந்து கொண்டு, இணக்கமாக இருந்து நோய்க்கான தீர்வை பக்குவமாக எடுத்து சொல்ல வழி சொல்லும்.

வியாபாரிகள், நிர்வாகிகள்உற்சாக மனநிலையில் தொழிலை கவனிக்கும் சக்தி, வாடிக்கையளர்கள் சக ஊழியர்களுடன் சகஜமாக இருத்தல்,இணக்கமாக இருத்தல், புரியும்படி பேசுதல், தெளிவாக் கட்டளை பிறப்பித்தல்,திட்ட மிட்டு செயல் படும் திறன், இலக்குகளை எளிதில் அடையும் சூசகம் என பல நல்ல அம்சங்களை என்.எல்.பி தருகிறது

 விற்பனையாளர்கள்வாடிக்கையளர்களின் வாங்கும் ஆர்வம், முடிவெடுக்கும் பாங்கு, ஆகியவற்றை அறிய முடியும், வாடிக்கையளர்களை எளிதில் நட்புறவு கொள்ள செய்ய முடியும்.
நமக்கு நாமே’ – என்.எல்.பி மனத்துக்கான சுய வழிகாட்டி. எனவே என்.எல்.பி உத்திகளை தானே பயிற்சி செய்து வாழ்வின் சிக்கல்களுக்கு விடை கண்டுபிடிக்க முடியும். ஒரு தனி நபர் சுய சார்பில் சிறந்து விளங்கி வாழ்வில் மகிழ்ச்சியை கூட்டிக் கொள்ள முடியும்

சவால்களை சந்திக்கும் ஆர்வமும், மாற்றத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கும் திறந்த மனமும் வாழ்க்கையயும் அது தரும் வாய்ப்புகளையும் ரசிக்கும் மனநிலையும், ருசிக்கும் மனோபாவமும் உள்ளவர்களுக்கு என்.எல்.பி பல விஷயங்களை அள்ளித்தரும்.

புதிய ஆத்திசூடி- NEW SAYINGS FROM POET BHARATHI

பாரதியாரின் புதிய ஆத்திசூடியிலிருந்து சுய முன்னேற்றம் சார்ந்த சில.
Nationalist poet Sri Subramanya Bharathi’s Sayings

1. அச்சம் தவிர் – AVOID FEAR

2. ஆண்மை தவறேல் – SLIP NOT FROM VALOR

3. எண்ணுவது உயர்வு – THINK HIGH

4. ஓய்தல் ஒழி – GIVE UP LAZING AROUND

5. கற்றது ஒழுகு – PRACTICE WHAT YOU LEARNT

6. காலம் அழியேல் – DO NOT WASTE TIME

7. குன்றென நிமிர்ந்து நில் – STAND TALL LIKE MOUNTAIN

8. கெடுப்பது சோர்வு – LAZINESS SPOILS

9. கேட்டிலும் துணிந்து நில் – BE BRAVE EVEN DURING TURBULANCE

10.கைத்தொழில் போற்று – ADORE YOUR OCCUPATION

11. கௌவியதை விடேல் – DO NOT GIVE UP UNDERTAKEN TASK

12.சிதையா நெஞ்சு கொள் – HAVE A HEART HARDLY BROKEN

13.சுமையினுக்கு இளைத்திடேல் – DO NOT BE DISHEARTENED BY RESPONSIBILITY

14.செய்வது துணிந்து செய் – BE BOLD IN DOING

15.சொல்வது தெளிந்து சொல் – STATE WITH CLARITY

16.ஞிமிரென இன்புறு – ENJOY YOUR WORK LIKE BEES

17.தன்மை இழவேல் – DO NOT  DISLODGE FROM YOUR NATURE

18.தாழ்ந்து நடவேல் – DO NOT LOWER YOUR ESTEEM

19.தோல்வியில் கலங்கேல் BE NOT DISILLUSIONED WITH FAILURE

20.நாளெல்லாம் வினை செய் – ENGAGE IN ACTIVITIES FULL DAY

21. நினைப்பது முடியும் – WHAT IS CONCEIVED IS WELL ACHIEVED

22.நுனியளவு செல் – FINIISH TASK TILL THE LAST STRAW

23.நையப் புடை – DO WIITH FULL DETARMINATION

24.நோற்பது கைவிடேல் – GIVE UP NOT COMMITMENT

25. புதியன விரும்பு – SEEK FOR NEW

NLP

NLPயில் சிறக்க 6 யோசனைகள்

 

என்.எல்.பி- யில் தேர்ச்சி பெற யோசனைகள

nlp

 

 

1. நோக்கம்
என்.எல்.பி பயில வருபவர்களில் பலர் வெறும் ஆர்வம் காரணமாக வருபவர்களே.
புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பொதுவான நோக்கத்தில் உள்ளே வந்ததும் என்.எல்.பி-யாக அவர்களை ஏதோ புதுவிதமாக மாற்றிவிடும். அவர்களுக்குள் புதுமையை புகுத்திவிடும் எனக் கருதி சோம்பி இருந்து விடுகின்றனர்.
புத்தகங்களைப் படிக்கும்போதோ, பயிற்சி வகுப்புகளில் சேரும்போதோ பொத்தாம் பொதுவாக இருந்து விடுகிறார்கள். அப்படி இருப்பதால் பயிற்சி வகுப்பு முடிந்தபின்னே கற்றுக்கொண்டவற்றை எப்படி நடைமுறை வாழ்க்கையோடு இணைத்து கொண்டு பயன் அடைவது என தெரியாமல் நாளாக நாளாக மறந்தும் போகிறார்கள்
ஒரு நோக்கம் இருக்கும்போது முயற்சிக்கு திசை கிடைக்கும். பயிற்சி செய்ய ஊக்கம் கிடைக்கும். முன்னேற்றத்தின் அளவை புரிந்து கொள்ள முடியும்.
மேலும் என்.எல்.பி என்பது செய்து பார்த்து பலனை அனுபவிக்கும்போதே

அதன் விசேஷத்தன்மையும் ஆச்சர்யங்களையும் புரிந்து கொள்ள முடியும்.
பொத்தாம் பொதுவாக முன்னேற்றத்துக்கு என சொல்லாதீர்கள். குறிப்பிட்ட பலனை பெற விழையுங்கள். உதாரணத்திற்கு,
நம்பிக்கை பெற,
தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள,
சலிப்பு மனப்பான்மையை போக்கிக் கொள்ள,
கோபத்தைக் குறைக்க,
தொழிலில் சிறக்க,
உறவுகள் மேம்பட,
சந்தோஷம் பொங்கிட,
என ஏதோவொரு பலனை என்.எல்.பி யால் அடைய வேண்டும் என முடிவெடுத்து பயிற்சி எடுத்துக் கொள்ளும்போது பலன் கிடைக்கும்.
கிடைத்த பலனே உற்சாகம் ஊட்டி அடுத்த இலக்கை அடைய வழி வகுக்கும். ஒரு வெற்றி மற்றொரு வெற்றிக்கு தூண்டுகோலாக அமையும்.
எனவே என்.எல்.பி பயில வருபவர்கள் ஒரு இலக்கு வைத்துக் கொண்டு பயிற்சி எடுத்துக் கொள்வது சிறப்பு.
எதற்காக என்.எல்.பி படிக்க வேண்டும்? என்பதை முடிவு செய்யுங்கள்

 

2. தீர்மானமாக இருத்தல்.

எதற்காக என்.எல்.பி படிக்கிறீர்கள் என்பதை முடிவு செய்த பின் அதை அடைந்தே தீருவது என்ற தீர்மானமான உள்ளத்தோடு இருக்கும்போதே விருப்பம் செயல் வடிவம் பெறுகிறது.
இதற்கு ஒரு அர்ப்பணிப்பு மனப்பான்மை வேண்டும். உங்களையே பயிற்சிக்கு அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
தினம் 10 நிமிடமாவது என்.எல்.பி பற்றி சிந்திப்பது, படிப்பது, என ஆரம்பித்து பயிற்சிக்கு என ஒரு 30 நிமிடம் ஒதுக்கி ஈடுபட வேண்டும்.
ஒரே நாளில் நட்சத்திரங்களை எண்ணிவிட வேண்டும் என்போரே அதிகம்.
விதைத்ததும் மரமாவது வித்தையில் ஆகலாம் வாழ்க்கையில் ஆகாது.
மந்திரத்தில் மாங்காய் முளைக்காது என்ற பழமொழியை நினைவில் கொள்க.
பயிற்சியில் நம்பிக்கை; முயற்சியில் நம்பிக்கை.
அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
ஆசைப் பட்டாலும் பல பேர் என்.எல்.பி-யின் விசேஷ பலன்களை அனுபவிக்க முடியாமல் போவதற்கு ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் இல்லாமல் போவதே. பொறுமையும் பொறுப்புணர்வும் இருந்து விட்டால் என்.எல்.பி பல அற்புதங்களைத் தருவதை உணரலாம்.

குறள் வாக்கு என்ன?
“ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவுயிலா
ஊக்கம் உடையான் உழை”

தளர்ச்சி இல்லாமல் சலிப்பு இல்லாமல் ஊக்கத்தோடு உழைப்பவனை செல்வம் தேடிச் செல்லும் என்கிறார் திருவள்ளுவர்.

எனவே திட்டமிட்டு குறைந்தது ஒரு மாத அவகாசம் கொடுத்து நம்பிக்கையோடு காத்திருங்கள்.
பலன் நிச்சயம் கிடைக்கும்.
வாழ்க்கை சிறக்கும்.
மகிழ்ச்சி பொங்கும்.

 

3. சுய பாராட்டு


எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதில் ஏற்றம் இல்லை.
என்.எல்.பி பயிற்சிக்குள் வரும் பலபேர் பலன் உடனே கிடைத்திட வேண்டும்.
பயிற்சி செய்வதற்கு  விருவிருப்பாக இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுகொள்கிறார்கள்.
பல சமயங்களில் என்.எல்.பி பயிற்சி அது செய்கின்ற முறையில் ஆஹா என திகில் ஆக இருக்கும் என சொல்ல முடியாது. ஆனால் பலனில் அது அதிசயத்தை நிகழ்த்துவதே. எனவே பயிற்சி வகுப்பு முடிந்த பின்னர் அவரவர் பணியிடங்களுக்கு சென்ற பின்னர் அவர்களாகவே பயிற்சியைத் தொடர்வது என்பது குதிரை கொம்பாகிவிடுகிறது.
எனது பயிற்சி வகுப்புக்கு வருபவர்களில் பெரும்பாலோர் கேட்கும் ஒரே கேள்வி, “ இதை நான் தினம் செய்ய வேண்டுமே? அதுதான் பெரிய சவால். அதுவும் 30 நாள் செய்யணுமே.. எல்லா நாளும் செய்ய முடியுமா தெரியல்லை? 30 நாளும் மறக்காமல் செய்வதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?’ என்பார்கள்.
வேதனையான வேடிக்கை இது.
அவநம்பிக்கையில் வெளிப்படுத்தும் தன்னிலை விளக்கம்.
ஒரு நாள் செய்து விட்டு
மறுநாள் மறந்து விட்டு
மூன்றாம் நாள் ‘நேற்று செய்யவில்லையே’ என சலித்துக் கொள்வதில் செலவிட்டு விட்டு,
நான்காம் நாள் வழக்கம்போல் தன்னைக் கடிந்து கொண்டி விட்டு,
ஐந்தாம் நாள் நம்பிக்கை இழந்து விட்டு
ஆறாம் நாள் பின்னாளில் ஒரு நாள் மீண்டும் தொடங்கலாம் என சமாதானப் படுத்திக் கொண்டு
ஏழாம் நாள் மறந்தே போய்விடுவார்கள்.
மீண்டும் ’பழைய குருடி கதவைத் திறடி’’ கதைதான்.
எனவே ஒரு நாள் பயிற்சியை செய்து முடித்ததும் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். பரிசு கொடுத்துக் கொள்ளுங்கள்,
நடுவில் ஒரு நாள் செய்யமுடியாமல் போனால் கடிந்து கொள்ளாமல் மன்னித்து மீண்டும் செய்யத் தொடங்குங்கள்.
சுய பாராட்டே சிறந்த பாராட்டு.

4.  நாள் திட்டம்
24 மணி நேரம் கொண்ட ஒரு நாளில் ஒரு 20 நிமிடம் கண்டு பிடிப்பது கடினமாக இருக்கிறது உங்களுக்கு என்றால் எவ்வித புது முயற்சியும் உங்களால் முடியாது என்றுதான் அர்த்தம்.
செக்கு மாடுபோல செய்ததையே செய்து கொண்டிருப்பவர் நீங்கள்.
செய்ததையே செய்து கொண்டிருந்தால் கிடைத்த பலனேதான் கிடைத்துக் கொண்டிருக்கும்.
ஆகவே புதிய பலன்களுக்கு புது முயற்சி தேவை.
புது முயற்சிக்கு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு கூடவே எப்படி செய்யப் போகிறோம் எப்போது செய்யப் போகிறோம் என்ற கணக்கும் தேவை
எனவே ஒரு நாளில் என்.எல்.பி பயிற்சிக்கென, அல்லது வாசிப்புக்கென நேரம் கண்டிபிடித்து செய்ய வேண்டும்.
எங்கே கவனம் இருக்கிறதோ அங்கேதான் நமது திறன் செலவாகிறது.
அன்றாடப் பணியை திட்டமிட்டால்தான் என்.எல்.பி பயிற்சியை செய்ய ஞாபகம் இருக்கும்.

செய்து பார்க்கும்போதுதான் பலன் என்ன எப்படி இருக்கிறது என புரிய ஆரம்பிக்கும்.
அதன் அடிப்படையில் ஒரு நாள் பணியை எப்படி திட்டமிட்டு என்.எல்.பி பயிற்சிக்கென நேரம் ஒதுக்கலாம் என்ற துல்லியம் மனசுக்குப் பிடிபடும்.
எனவே திட்டமிட்டு செயல் படுதல் அவசியம்.
புரிக செயல் புரிக செயல் புரிக செயல் என்பது பாரதி கூற்று

5. உதவியை நாடுதல்

 இந்த உலகில் மனிதன் தனித்து விடப்படவில்லை.
ஆம். பிரபஞ்சப் பேரறிவு அவனுக்குத் துணை நிற்கிறது.
திறந்த மனத்துடன் நம்பிக்கையோடு இருப்பவர்களுக்கு பிரபஞ்சப் பேரறிவு தூண்டுகோலாய் நிற்கிறது. மறைபொருளாய் நின்று வலிமை தருகிறது.
எனவே பயிற்சியில் நம்பிக்கை வைத்து ஈடுபாட்டோடு முயற்சி செய்யும்போது பிரபஞ்சப் பேரறிவு உள்ளுணர்வு மூலமும் ஞானச்செல்வததை வாரி வழங்குகிறது.
மேலும் படித்ததில் சந்தேகம் ஏற்பட்டால் என்.எல்.பி அறிந்தவர்களை நாடி விளக்கம் பெறுதல் நல்லது.
சந்தேகத்திலிருந்து தெளிவு பெற உதவி கேட்கத் தயக்கம் காட்டுவது நமக்குத்தான் இழப்பு.
எந்த விஷயததையும் முழுமையாக அறிந்தவர் என்று யாரும் இல்லை. எல்லோருமே அவரவர் நிலையில் ஒரளவு தெளிவு பெற்றவர்தான்.
அல்லது என்.எல்.பி உத்திகளை செய்து பழக ஒரு கூட்டாளி தேவைப் பட்டால் நண்பர்கள் சொந்தங்களிடம் தயக்கப்படாமல் உதவி கேட்கவும்.
’தயக்கம்தான் தடை. அதை உடனே உடை’

6.குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்
கேட்ட எந்த விஷயமும் அப்படியே நினைவில் இருக்குமா என்பது கேள்வி குறியே.
படித்ததில் பிடித்தது, பளிச்சென இருக்கும் வாசகங்கள், முக்கியமான அறிவுரைகள்,கூற்றுகள், யோசனைகள் போன்றவற்றை குறிப்பெடுத்துக் கொள்ளுதல் பின்னால் நினைவு படுத்திப் பார்ப்பதற்கும், மனதில் பதிய வைத்துக் கொள்வதற்கும் பேருதவியாக இருக்கும்.
குறிப்பெடுத்தவைகளை மட்டும் அசைபோடும்போது முழு கருத்தும் மீண்டும் நினைவுக்கு வந்து கருத்து இன்னும் ஆழமாக பதிய வாய்ப்பு இருக்கிறது.
அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் என்பது நமக்குத் தெரியும்
என்.எல்.பி-யை பொறுத்தவரை அறிவால் அறிவதை விட அனுபவத்தால் உணர்வதே பலம் அளிக்கும் பலன் அளிக்கும்.
எனவே பயிற்சியின் துல்லியம் கூடக் கூட நிபுணத்துவம் பெறலாம்.

மீண்டும் சுருக்கமாக
1) நோக்கம் – ஏன் என்.எல்.பி பயில வேண்டும்

2) அர்ப்பணிப்பு – பயிற்சிக்கு உங்களை முழுசாய் ஈடுபடுத்திக் கொள்ளல்

3) சுய பாராட்டு – சிறிது செய்தாலும் உங்களை பாராட்டிக் கொள்ளுதல்

4) திட்டமிடுதல் – அன்றாடம் கவனமாக என்.எல்.பி க்கு நேரம் ஒதுக்குதல்

5) உதவி நாடுதல் – அறிந்தவர்களிடம் ஐயம் தெளிவுறுதல்

6) குறிப்புகள் – முக்கிய கருத்துகளை குறித்து கொண்டு மீண்டும் வாசித்தல்

மேற்சொல்லியிருக்கும் ஆறு விஷயங்களை மனதில் கொள்க. நடைமுறைப்படுத்துக. என்.எல்.பி-யில் தேர்ச்சி பெற்று வாழ்க்கையை வசப்படுத்தலாம்.

வாழ்வின் வளமைக்கு ’லூயிஸ் ஹே’ தரும் கருத்தேற்றம்

வாழ்வின் வளமைக்கு ’லூயிஸ் ஹே’ தரும் கருத்தேற்றம்
( LOUISE L HAY’s AFFIRMATION for PROSPERITY)

  • ’’நான் இருக்கும் இந்த எல்லையற்ற வாழ்வில் எல்லாம் ஒழுங்காகவும்,முழுமையாகவும், நிறைவாகவும் இருக்கின்றன.
  • என்னைப் படைத்த சக்தியோடு நான் சேர்ந்தே இருக்கிறேன்.
  • பிரபஞ்சம் வழங்கும் வளமைப் பெருக்கத்தை அப்படியே உள்வாங்குவதற்குத் திறவாய் இருக்கிறேன்.
  • நான் கேட்பத்ற்கு முன்பே என் தேவைகளும் ஆசைகளும் பூர்த்தியாகின்றன.
  • தெய்வத்தின் பாதுகாப்பும் வழிகாட்டுதலும் எனக்கு இருக்கிறது.
  • எனக்கு நன்மை அளிப்பனவற்றையே நான் தேர்வு செய்கிறேன்.
  • எல்லோருக்கும் நிறையவே கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் மற்றவர்களின் வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்
  • என்னுள் வளமை உணர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை பிரதிபலிக்கும் விதமாக என் வருமானம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
  • எல்லா திசையிலிருந்தும் எல்லோரிடமிருந்தும் எனக்கு நன்மைகள் வந்து சேருகின்றன.
  • என் உலகில் எல்லாம் சரியாகவே இருக்கின்றன.’’

 

( மேற்கண்ட வாக்கியங்களை 21 நாளைக்கு தினமும் படித்து மனதில் பதிய வைத்துக் கொண்டால் எண்ணம் வலிமை பெற்று வாழ்வு சிறக்கும் என்பது உறுதி)

 

லூயிஸ் ஹே என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாவின் வாயிலிருந்து தன்னைத் தானே மீட்டெடுத்த வழிமுறையை பயிற்சி வகுப்புகள் மூலம் பகிர்ந்து வருகிறார்.

அவரது வளைதளம்   http://www.louisehay.com/

 

 

பயனுள்ள வாழ்க்கை

Ò        பாரமார்த்திக நோக்கத்திலும் சக்தியிலும் தினமும் முன்னேறுவீர்களானால் வாழ்க்கைப் பயனுள்ளது.!

Ò        அனுதினமும் நேர்மையான குணத்தாலும் பொலிவினாலும் துலங்குவீர்களானால் வாழ்க்கைப் பயனுள்ளது.!

Ò        பிறருக்குப் பயனுள்ள வகையில் வாழ்வீர்களானால் வாழ்க்கைப் பயனுள்ளது.!

Ò        உங்களுடைய பொறுப்புகளை அவசிய பணிகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வீர்களானால் வாழ்க்கைப் பயனுள்ளது!

Ò        வாழ்க்கை நிலையை, வாழ்க்கைச் சூழலை சஞ்சலமற்ற நம்பிக்கையோடு சந்திப்பீர்களானால் வாழ்க்கைப் பயனுள்ளது.!

Ò        நியாயத்தின் பாதையில், நேர்மையான முறையில் பயணிப்பீர்களானால் வாழ்க்கை பயனுள்ளது.!

Ò        குற்றம்,துக்கம், நோவு நிறைந்த உலகிலும் நீங்கள் வலிமையுடனும், பிரகாசமாகவும் இருப்பீர்களானால் வாழ்க்கை பயனுள்ளது.!

Ò        படைத்தவனோடு சேர்ந்தே இருக்கிறீர்கள், படைத்தவனை சார்ந்தே இருக்கிறீர்கள் என்றால் வாழ்க்கை பயனுள்ளது!.

Ò        பகவான் தரும் பாதுகாப்பும் வழிகாட்டுதலும் தீர்மானமானது தவறாதது என்ற உணர்வில் அன்றாடம் வளர்ந்துகொண்டிருப்பீர்களானால் வாழ்க்கை பயனுள்ளது!

(O P GHAI ஆங்கில மூலத்தைத் தழுவி தமிழில் என் மொழியில்) .

 

வாழும் கலை – OP Ghai

வாழ்க்கை பற்றிய சில சிந்தனைகள்

  •  வாழும் கலையை அறிந்து பயனடைய வேண்டுமெனில் பல ஆண்டுகளாய் கடைபிடித்த கட்டுப்பாடு, கவனித்து அறிதல், அனுபவம் ஆகியவை தேவை.
  •  நம்முடைய தவறான கணிப்புகளையும், குறைகளையும், திருத்திக் கொள்ள அன்றாடம் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன.
  • இன்னும் சிறப்பாகவும்,வித்தியாசமாகவும் எந்தெந்த காரியங்களை செய்திருக்கக்கூடுமென கவனித்தீர்களானால், உங்களுக்கு அன்றாடம் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு இன்னும் சிறப்பாக செய்து விடலாம். அதற்கு விழிப்புணர்வு போதும்.
  • வாழ்க்கை என்பது பள்ளிக்கூடம். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடது, எப்படி திட்டமிட வேண்டும், எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை கற்றுணரலாம்.
  • இந்த பள்ளியின் ஆசிரியர் சில சமயம் கடுமையாகவும், கருணையற்றவராகவும் தோன்றலாம்; ஆனால் இந்த கடுமையும், போதனையும் அப்போது வேதனையாகத் தோன்றினாலும் நம்முடைய நலனுக்கே என பின்னாளில் புரியும்.
  •  வாழ்க்கை என்னும் அற்புதமான கல்விக் கூடத்தில் கிடைக்கும் பாடத்தை நன்கு படித்தறியுங்கள்
  •  அவ்வப்போது ஏதேனும் சிக்கல் வந்தாலும் உறுதியாக இருங்கள் ஏனெனில் தீர்வு எங்கோ காத்திருக்கிறது. ஒருநாள் உங்களை உறுதியாக வந்தடையும்.