For Self Efficacy – Gita says
தன்னைத் தானே உயர்த்திட வேண்டும்
தன்னைத் தாழ்த்தல் தவிர்த்திட வேண்டும்
தனக்கு நண்பனும் பகைவனும் தானே
/கீதை அத்6 சுலோ 5/
one should cause for one’s emancipation & growth;
one should refrain from self deprecation;
one is one’s own friend & one’s own enemy
/BG ch6 sloka 5/
தன்னைத் தானே வென்றான் இடத்தே
தானே தனக்கு நண்பனும் ஆவான்
தன்னைத் தானே வெல்லான் தனக்குத்
தானே எதிராய்ப் பகைவனும் ஆவனே
/கீதை அத்6 சுலோ6/
One who is congruent becomes one’s own friend
One who is not congruent is one’s own enemy
/BG ch6 sloka6/