For Self Efficacy – Gita says

தன்னைத் தானே உயர்த்திட வேண்டும்
தன்னைத் தாழ்த்தல் தவிர்த்திட வேண்டும்
தனக்கு நண்பனும் பகைவனும் தானே
/கீதை அத்6 சுலோ 5/
one should cause for one’s emancipation & growth;
one should refrain from self deprecation;
one is one’s own friend & one’s own enemy
/BG ch6 sloka 5/

தன்னைத் தானே வென்றான் இடத்தே
தானே தனக்கு நண்பனும் ஆவான்
தன்னைத் தானே வெல்லான் தனக்குத்
தானே எதிராய்ப் பகைவனும் ஆவனே
/கீதை அத்6 சுலோ6/
One who is congruent becomes one’s own friend
One who is not congruent is one’s own enemy
/BG ch6 sloka6/

The need for action – செயலின் தேவை

உலகில் செயலில் வெற்றி விழைவார்
தேவதை தமையே தொழுதே வழுத்துவர்
மனிதர் நிறைந்த உலகில் வெற்றியும்
செயலில் இருந்தே விரைவில் விளையும்
/ பகவத் கீதை அத்4 சுலோ 12/
Meaning
Desiring fulfillement of actions,
many here sacrifice to gods.
In the human world,
accomplishment comes quickly
as a result of action.
/BG ch.4 sloka 12/

Srimadh Bagavath Gita emphasises the need for taking action than merely praying for success. Action cures, action alone cures in the manifested human world. Mere wishing & praying may not bear fruit as action can.

உழைப்பே உயர்வு – EFFORT IS NOBLE

நந்தெறும்பு தூக்கணம் காக்கை என்று இவைபோல்
தம் கருமம் நல்ல கடைபிடித்துத் தம் கருமம்
அப்பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பற்றி யாயினும் படும்
/ ஆசாரக் கோவை/

பொருள் : –
எறும்பு ஓய்வின்றி சுறுசுறுப்பாக உழைத்து உணவு தேடிக் கொள்வது போலவும்,
தூக்கணாங்குருவி விடாமுயற்சியோடு பாதுகாப்பான கூடு கட்டி வாழ்வதுபோலவும்,
காக்கை கூவி அழைத்து கூடி உண்பது போலவும்,
தன்னுடைய செயல்களில் சுறுசுறுப்பு, ஊக்கம், விடாமுயற்சி, பிறரை அனுசரித்து வாழ்ந்து பணியாற்றுபவனுக்கு உயர்வு நிச்சயம் உண்டு.

Meaning – One who tirelessly strives like ants, persistent like sparrow building its nest, accomodative like crow coexisting with its crowd, one is sure to succeed & grow in life.

ஒழுக்கம்- CONDUCT

நன்றி அறிதல் பொறை உடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத்தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசாரவித்து
/ ஆசாரக் கோவை/
1.பிறர் செய்த உதவிக்கு நன்றி பாரட்டுதல்,
2. பொறுமை உடையராக இருத்தல்
3. எந்த உயிருக்கும் தீங்கு செய்யாதிருத்தல்
4. இனிய சொற்களைப் பேசுதல்
5. உலகத்தோடு ஒட்டி வாழுதல்
6. கல்வி கற்று அறிவை வளர்த்தல்
7. பெரியவர்கள் வழிகாட்டியபடி வாழ்தல்
8. நல்ல குணம் உடையவர்களை நட்பாக கொள்ளல்

இவை எட்டும் நல்லொழுக்கத்தின் வித்தென ஆசாரக் கொவை சொல்கிறது.

1. Being grateful
2. Being patient
3. Being harmless
4. Being kind in words
5. Being adaptive to environ
6. Being  wise by proper learning
7. Being guided by respectable elders
8. Being a friend of those who are noble
These 8 qualities are the seeds for a noble life with appreciatable conduct says ” ACHARA KOVAI”

 

ThirukkuraL(திருக்குறள்)

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும் / குறள் 373/

MEANING  – Though one has read a number of books what comes to aid is what one has internalised.

Unless knowledge is put into action and realised within, mere accumulation of knowledge will only lead to vain analysis and intellectual gymnasium. Hence end & aim of life is not knowledge but action. What comes to rescue at times of difficulty is not information but one’s conviction. Hence read, contemplate, realise. Lfe will be rewarding.

The Real Essence of Bhagavat Gita

Laziness and inaction are not the traits of manliness.
Do not entertain them.Give up weakness and be ready for the struggles of life.
To submit to grief considering it as fate is sinning.
Do not surrender to opposition.
Learn to fight.To escape is no solution for problems.
Whatever comes face it squarely.
You have the power to turn the world. Bring it out.
There is nothing else that can give you greatness than this DHARMIC fight.